In 2015, the Young Tamil Author program created a platform to encourage children to write and explore the Tamil language. The program is simple children write stories, and Ipaatti publishes these stories as children's books. Through this program, we have created 50+ young Tamil authors, published 50 books, and placed these books in 100+ Tamil school libraries. Do you want to read our young author's book check out our online platform below?
Your support helps to motivate young authors. In 2015, with support from donors, we printed 1000 books and donated to 80+ Tamil schools in the USA. We started with 10 young authors in 2015, and now we have 50+ young authors in the USA. This year we like to expand this program in Canada and Australia. We need your financial support. We encourage by
1) Awarding $250 gifts.
2) Printing young authors' books and donating to Tamil schools.
September 2, 2019:
வாசிப்பு என்பது குறைந்து வருகிறது அது ஏன் என்கிற கேள்வியை இன்று ஒரு தொலைக்காட்சியில் கேட்டார்கள் ..
நாம் நமது பிள்ளைகளுக்கு புத்தக வாசிப்பு என்பதனை எந்த அளவிற்கு ஊக்குவிக்கிறோம், அல்லது வளர்த்தெடுக்கிறோம் என கேட்டேன் .
சென்ற மாதம் சிகாகோ தமிழ் மாநாட்டில் குமாரை சந்தித்தேன். பள்ளி குழந்தைகளுக்கு அவர்களிடம் ஒரு கதை எழுதச்சொல்லி அதை புத்தகமாக தயாரித்து தருகிறார்.
சிறு குழந்தைகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் கதை எழுதித்தந்து அதனை பதிப்பித்து எழுத்தாளர் சிரேயா சக்திவேல், எழுத்தாளர் மின்னிலா முத்துக்குமார் எனும் அடையாளம் ஒன்றை பெற்றோர்களோடு இணைந்து உருவாக்கும் அரிய காரியம் அது.
ஒரு கதையில் அக்குழந்தை சிரிய அகதிகளுக்கு கடவுள் ஒரு நாட்டை படைக்க வேண்டும் என கடவுளோடு உரையாடுகிறது. மற்றொரு குழந்தை காடுகள் அழிவதையும் சுற்றுச்சூழல் குறித்தும் தனது கவலையை ,மரம் வளர்ப்பின் அவசியத்தையும் கதையாக்கி இருந்தது.
இளம் பருவத்திலேயே சமூக பிரச்சனைகள் , மனிதர்கள் மீதான நேசம் ,அகதிகளது பிரச்னை ,என்று சிந்திக்கவும் அதனை மாற்றியமைக்கும் வழிகளையும் அப்பிள்ளைகள் தேட ஆரம்பிப்பது எத்தனை ஆரோக்யமானதொன்று என பிரமித்து நின்றேன்.
குமாரின் ஐபாட்டி முயற்சியை உலகெங்கிலும் உள்ள தமிழ் பள்ளிகள் பயன்படுத்தலாம். முயற்சியும் செய்யலாம்.
CT, Published 2 books
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி! - மின்னிலா முத்துக்குமார்
PA, Published a book
இந்த முதல் படைப்பை என்னுடைய துரை எழில்விழியன் தாத்தா, பார்வதி அப்பத்தா, ஆறுமுகம் தாத்தா மற்றும் மகாலெட்சுமி அம்மம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் படைப்பை உருவாக்கத் துணைபுரிந்த என் அப்பா துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், அம்மா ரமா ஆறுமுகம் மற்றும் தங்கை கனி அன்பிற்கு நன்றிகள் பல.- கண்மணி அன்பு துரைக்கண்ணன்
CA, Published a book
என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். - அனன்யா சிரீராம்
WI, Published a book
எல்லா விதத்திலும் என்னை ஊக்குவிக்கும் என் தாத்தாவிற்கு இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகிறேன். எப்பொழுதும் அவர் மரங்களை நட்டு, அவற்றின் மதிப்பைச் சொல்லிக் கொடுப்பார். காடுகள் அழிந்து கொண்டே இருப்பதால், ஒவ்வொரு மரத்தின் மதிப்பும் அளவிட முடியாதது! - தான்யா சண்முகசுந்தரம்.
CA, Published a book
இந்தக் கதையை நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்த எங்கள் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் குமாரவேல், எனது தமிழ் ஆசிரியர்கள் அபர்னா மற்றும் உமா, இந்தக் கதையை நான் தமிழில் எழுதவும் படங்கள் வரையவும் உதவி புரிந்த எனது அம்மா வினோதினி, அப்பா சிவக்குமார், தம்பி ஹரிஷ்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.- சமிக்ஷா சிவக்குமார்
NJ, Published a book
இந்த முதல் படைப்பை என்னுடைய துரை எழில்விழியன் தாத்தா, பார்வதி அப்பத்தா, ஆறுமுகம் தாத்தா மற்றும் மகாலெட்சுமி அம்மம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் படைப்பை உருவாக்கத் துணைபுரிந்த என் அப்பா துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், அம்மா ரமா ஆறுமுகம் மற்றும் தங்கை கனி அன்பிற்கு நன்றிகள் பல.- பிரதீஷ் தேவராஜா
GA, Published a book
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழைக் கற்றுக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் லில்பர்ன் பள்ளியில் தமிழ் படிக்கிறேன். என் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், வெளிநாடுகளில் தமிழை வளர்க்கும் அனைவருக்கும் இந்த புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகின்றேன்.- முத்துலெட்சுமி கிருஷ்ணப்பன்
CA, Published a book
இந்தப் புத்தகத்தை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, நான் தமிழ்ப் பயிலும் தென் விரிகுடாத் தமிழ்க் கல்விக்கும், i-பாட்டிக்கும் என் நன்றிகள். இந்த முதல் படைப்பை எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். இந்தப் படைப்பை உருவாக்கத் துணைபுரிந்த என் அப்பா சகாய ஸ்டேனிஸ் கென்னடி, அம்மா அதுல்யா ப்ரைட் மற்றும் தம்பி டான் ஜோயல் சகாய அன்பிற்கு நன்றிகள் பல. - டாப்னி சகாயா
You can now read our young author's story at our story portal. Click the 1-month subscription link and use the code "Trialread" at checkout. Get 1-month free access to our story portal.